''இந்த முறை கேக் இல்லை.. இது லாக்டவுன் கால பிறந்தநாள் கொண்டாட்டம்'' - அசத்திய இளைஞர்!

ஆரணியில் சாலையோரம் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில்,  பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட நண்பர்களுடன் முடிவெடுத்துள்ளார்

Continues below advertisement

 

 

இந்நிலையில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து 200 - க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு தயார் செய்து அதனை பேக்கிங் செய்தனர்.பின்னர் ஆரணியில் சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும், ஆரணி அடுத்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கும் உணவுபொட்டலம், தண்ணீர்பாட்டில், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய தொகுப்பினை வழங்கியுள்ளனர்

      

பொறுப்புணர்வோடு சாலையோரம் வசிக்கும் ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி அசத்திய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

"இந்த யோசனை எப்படி தோன்றியது என சந்தோஷிடம் கேட்டபோது"'

நான் திருவண்ணாமலையில் மாவட்டம் ஆரணி பேருராட்சியில் வசிக்கிறேன்.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால்  உயிரிழப்பு, பொருளாதாரம் பாதிப்பு என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு மக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 


பொதுமக்கள் சாலையோரத்தில் உணவு இன்றி தவிப்பதை பார்த்தேன். இதனால் என்னுடைய பிறந்தநாளை எப்பொழுதும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவேன். இந்த வருடம் பிறந்த நாளைக்கு செலவாகும் பணத்தினை   உணவின்றி தவிப்பவர்களின் பசியை போக்குவதற்காக பயன்படுத்தினேன். உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில், முககவசம் உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கினேன். உணவு பொட்டலங்களை  வாங்கியவர்கள் மனதார எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் எப்போதும் கொண்டாடிய பிறந்தநாளை விட மகிழ்ச்சியாகவும் இருந்தது.

 

என்னுடை வாழ்நாளில் இந்த வருட பிறந்த நாளை என்னால் மறக்க முடியாது. ஏன் என்றால் என்னுடைய நண்பர்களுடன் அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியது மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றவர்களிடம் கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள் பல முறை வீட்டிலும், நண்பர்களுடனும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டியிருப்பீர்கள் .ஆனால் இவர்களைப் போல பசியுடன் பலபேர் உள்ளனர். ஒரு முறை உணவின்றி தவிப்போருக்கு உணவுகள் கொடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள்’’ என கேட்டுக்கொண்டார்.


சைவ பால் தயாரிக்க கூறிய பீட்டா; பதிலடி தந்த அமுல் இயக்குனர்!


 

Continues below advertisement
Sponsored Links by Taboola