55வது தேசிய நூலக வர விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட பொது நூலகத்துறை மாவட்ட மையம் நூலக வாசகர் வட்டம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தினர் . சிஇஓ கீதா தலைமை வகித்தனர். மாவட்ட மையம் நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகம் சுந்தரம் பேசுகையில்,” நேற்று மாணவர்களாக இருந்த நாங்கள் இன்று நீதிபதிகளாக உள்ளோம். இன்று மாணவர்களாக உள்ள நீங்கள் நாளை நீதிபதிகளாக உயர்வீர்கள். நான் நூலகத்தை பயன்படுத்தியவன் விடுமுறை நாட்களின் நூலகம் சென்று வேலை பார்த்தவன். நீதிபதியாக இருக்கும் நாங்களே தினம் தினம் சட்டங்களை படிக்கின்றோம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வேலைக்கு போட்டி தேர்வு நிறைய உள்ளது. அவற்றை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளலாம். தினசரி நியூஸ் பேப்பர், புத்தகம் படிக்க வேண்டும் அப்போதுதான் தன்னம்பிக்கை வரும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் ஏற்படும்.
மாணவர்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது 100 சதவீதம் வெற்றி பெறும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது செருப்பு அணிகிறோம். சட்டை போட்டுக் கொள்கிறோம். செல்போன் எடுத்துக் கொள்கிறோம். இவை யாவும் அனிச்சை செயலாக மாறிவிட்டது . லைசென்ஸ் இன்றி யாரும் இரு சக்கரம் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிவது அனிச்சை செயலாக இருக்க வேண்டும். சாலை விபத்தில் அதிக உயிர்ச்சேதம் செய்தும் தலைக்கவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பிற்கு கருவறை முதல் கல்லறை வரை பல சட்டங்கள் உள்ளது. ’குட் டச் வேண்டாம், பேட் டச் வேண்டாம், டோன்ட் டச்’ என்று இருங்கள். ஒரு பெண்ணை தொடர்ந்து ஒருவர் பின் தொடர்ந்து வந்தாலே அது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார் . கரூர் தலைமையில் குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் மாவட்ட சட்டப்பணிகள் ஆனை குழு செயலாளர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். வாசகர்வட்டத் தலைவர் தீபம் சங்கம் நன்றி கூறினார்.