அண்ணன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் அண்ணன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தம்பியும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரத்தினம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவர் தம்பி மயில் சுகாதாரத்துறை முன்னாள் ஊழியர்.
இந்நிலையில் உடல் நலம் குன்றிய அண்ணன் ரத்தினம் நேற்று திடீரென உயிரிழந்தார். அண்ணன் இறப்பு குறித்த தகவல் அறிந்த மயிலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவர் மயிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூரில் அண்ணன் இறந்த சில மணி நேரத்தில் துயரம் தாங்காமல் தம்பி மாரடைப்பால் உயர்ந்த சம்பவம் அந்த குடும்பத்தினரையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அண்ணன் தம்பிகள் இடையே சொத்து தகராறு நிலப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கேள்விப்பட்டிருப்போம் . அதேபோல் அண்ணனுக்காக தம்பியும் தம்பிக்காக அண்ணனும் சில சில உதவிகளை கைமாறி கொள்வார்கள். ஆனால் கரூரில் அண்ணன் இறந்த சில மணி நேரத்தில் தம்பி இறந்த சம்பவம் சகோதரர்களின் பாசப் போராட்டத்தில் உச்சமாக கருதப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் பெண் பலி.
தோகை மலை அருகே கல்லை ஊராட்சி மாலை மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் இவருடைய மனைவி பத்மா வயது 37. விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஆன இவர்கள் இரண்டு பேரும் மாலை 5 மணி அளவில் குச்சி பொம்மை நாயக்கம்பட்டியில் இருந்து தங்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இது போல் தமிழ்நாடு காகித ஆலையில் பணிபுரிந்து வரும் தங்கப்பாண்டி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது குச்சிபொம்மை நாயக்கன்பட்டியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பத்மா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தங்க பாண்டி ஆகியோரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பலியான பத்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.