கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர் செ. ஜோதிமணி தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் த. பிரபு சங்கர் முன்னிலையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சார்பில் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்கள் குறித்தும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும், பயனாளிகள் அளிக்கின்ற விண்ணப்பங்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு விரைவாக முடித்து தருவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கல்விக்கடன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கல்விக் கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது.
மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக வங்கி கடன் வழங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்கி கடனுதவிகளை தருவதற்கு முன் வர வேண்டும். கல்விக்கடன் பெற வேண்டுவோருக்கு ஆலோசனை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பற்றி கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் தொலைபேசி எண்.04324234815, வாட்ஸ் அப் எண் 9442613165 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது அவற்றினை பரிசலித்து அவர்களுக்கு கடனுதவிகளை வழங்கிட வேண்டுமென கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர் செல்வி.செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
பாலம் திட்டத்தின் கீழ் குளித்தலை வட்டம் இரும்புதிபட்டி பாலம் வாழ்வாதார மையத்திற்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் சார்பில் ரூ.15.81 இலட்சம் மானியத்துடன் வங்கி கடனுதவிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்கள் வழங்கினார்கள். திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சீனிவாசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் தமருபாணி, முன்னோடி வங்கி மேலாளர் . வசந்த்குமார், இந்திய ரிசர்வு வங்கியின் உதவி பொது மேலாளர் ஶ்ரீதர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேளாளர் மோகன்கார்த்திக், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/