Sankaraiah Tribute LIVE: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா, அஞ்சலி நிகழ்வுகள்.. செய்திகளுக்கு இணைந்திருங்கள்..

மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சங்கரய்யா வயது மூப்பு காரணமாக இன்று (நவ. 15) சென்னையில் காலமானார்.

க.சே.ரமணி பிரபா தேவி Last Updated: 16 Nov 2023 04:11 PM
தோழர் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான சங்கரய்யாவின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

சீதாராம் யெச்சூரி சங்ரய்யா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி

சீதாராம் யெச்சூரி சங்ரய்யா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்..

தோழர் சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் எப்போது?

சங்கரய்யா இறுதி ஊர்வலம் நாளை (நவ.16) காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பெசன்ட் நகர்  இடுகாட்டில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரர்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

''நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின்  15 ஆவது மாநிலச் செயலாளராகவும்,  இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி’’ என்று முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் அறிவிப்பு

தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இறுதி அஞ்சலி: நிகழ்வுகள் என்னென்ன?

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா ன் உடல் இன்று 12 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. மதியம் 3 மணிக்கு கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இயக்கம் வளர தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்: கே.எஸ்.அழகிரி இரங்கல்!

தோழர் சங்கரய்யா மறைவுக்கு  காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ’’தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக, தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்’’ என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல்!

தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதேபோல எம்.பி.யும் விசிக தலைவருமான திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


மேலும் எம்.பி.யும் பாமக தலைவருமான அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தோழர் சங்கரய்யாவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

மறைந்த தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 

தகைசால் தமிழருக்கு தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!

தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த அப்பலோ மருத்துவமனை செல்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

மக்கள் தோழர் சங்கரய்யா!

தமிழக அரசு வழங்கிய ’தகைசால் தமிழர் விருது’டன்  அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை, விழா மேடையிலேயே தமிழக அரசின் கொரோனா சிகிச்சை நிதிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே அளித்தவர் தோழர் சங்கரய்யா.

Background

மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தியாகி சங்கரய்யா வயது மூப்பு காரணமாக இன்று (நவ. 15) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 102. சென்னை அப்பலோ மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல், சளி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.


சங்கரய்யா அரசியல் வாழ்க்கை


* 1939-ல் மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா. 
* 1967, 77, 80 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு & கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் சங்கரய்யா.
* 1986-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
* 1995- 2002ம்  ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பதவி வகித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.