தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.




கரூர் மாவட்டம், வெங்கமேடு என்.எஸ்.கே நகரில் இன்று (09.12.2022) கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் க. கவிதா முன்னிலை வைத்தார்.


 




பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், "கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில், நடைபெறும் வெறிநோய் தடுப்பு முகாமின் நோக்கமானது, நாம் செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளில் வெறிநோய் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தவும், அதன் மூலம் வெறிநோய் தொற்று ஏற்பட வண்ணம் தடுக்கவும், பொது மக்களுக்கு இந்த நோய் குறித்த சரியான புரிதலையும் முறையான விழிப்புணர்வினையயும் ஏற்படுத்தவும் மற்றும் இதுகுறித்த செயல்பாடுகளும், 


இந்த முகாம்கள் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் இம்முகாம்கள் இன்று முதல் ஜனவரி 23 வரை மொத்தம் 12 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிராணிகள் நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் தடுப்பு முறைகளை கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 1580 அளவுகள் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தயார்நிலையில் உள்ளது" என தெரிவித்தார்.


பின்னர் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.




இம்முகாமில் இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு மரு. முரளிதரன், உதவி இயக்குநர் மரு. சரவணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, கால்நட மருத்துவர் மரு.ராஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு. உமாசங்கர், மரு.ரமேஷ், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் திரு. சக்திவேல், கரூர் வட்டாட்சியர் திரு. சிவகுமார்,மற்றும் கால்நடை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


குளித்தலையை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து குப்புரெட்டிபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கால்நடை துறை இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார் பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன் துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் திட்டங்கள் குறித்து பேசினார். சிறந்த கால்நடை பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை குறித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் 1500க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழைத்துவரப்பட்டன.


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.


தரகம்பட்டி, அருகே பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொம்ம கவுண்டனூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சிரும்பாயி தலைமை வகித்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் மூலம் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் செயற்கை முறை, கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சைகள், அளிக்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். இதில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டன.