கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மாணவிகளுக்கான உதிரம் உயர்த்துவோம் தொடர்பான பள்ளி தலைமையாசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், 


 


 




 


 


நம்முடைய மாவட்டத்தில் எடுக்கப்பட்ட  புதுமுயற்சியான உதிரம் உயர்த்தவும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகள் 9 முதல் 12 படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுக்கும் இந்த ரத்த பரிசோதனை மேற்கொள்ளபட்டது. குறிப்பாக 17 ஆயிரம் குழந்தைகளுக்கு கடந்த ஒரு மாதத்தில் இரத்த மாதிரி எடுத்து நம்முடைய அருகில் இருக்கக்கூடிய பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்த அவர்களுடைய ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு என்பதனை நாம் கணக்கெடுத்து வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி 16 வகையான காரணிகள் கணக்கெடுத்துள்ளோம். இந்த 17,000 குழந்தைகளுக்கு ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. உண்மையிலேயே மிக மிக சவாலான விஷயமானால் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்த செயலை செய்து காட்டியுள்ளோம் அதற்கு முதற்கண் செய்து காட்டியுள்ள அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


 




 


 


உங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்  குறிப்பாக இந்த பணியில் ஈடுபட்டு  குறிப்பாக உங்கள் பள்ளியில் இந்த ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மிக முக்கியமான ஒரு நம்ம வீட்டில் பெண் குழந்தைகள் இருப்பார்கள் அனைவருக்கும் ஆன விஷயம் ரத்த சோகையை சாதாரண விஷயமாக தெரியும். இப்பொழுது நாம் எடுத்துள்ள மிக அதிக அளவு பெண் குழந்தைகளுடைய ரத்த சோகை இருப்பது நாம் கண்டறிவோம். அவருடைய இரத்தத்தில் ஹீமோகுளோபின் எவ்வளவு உள்ளது என்பதனை கண்டறிவோம். அதைவிட இதில் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் என்ன செய்யப் போறோம் என்பது குறித்து விழிப்புணர்வு தான் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம். ரத்தசோகை என்பது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு  குறைவது தான்  ஒரு விஷயம் ஆகும்,  மிக மிக அதிக அளவு த்தசோகை நோய் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் இரும்பு சத்து குறைபாடு, விட்டமின் பி குறைபாடு , நுண்ணுயிர் சத்து குறைபாடு தான் ரத்த சோகை வர காரணம்  இதுபோன்ற இரத்தசோகை கண்டறியும் விதமாக 4 பிரிவுகளாக ஹீமோகுளோபின் அளவை  ஆராயப்படவுள்ளது..


 


இந்த உதிரம் உயர்த்துவோம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து உள்ளீர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களை மட்டும் வைத்து ஒரு குறும்படம் விழிப்புணர்வு நாம் எடுத்து உள்ளோம் இந்த 16 ஆயிரம் இரத்த மாதிரி எடுத்ததை மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டும். இந்த முக்கியத்துவத்தையும் ரத்தசோகை மருத்துவம் மற்றும் அது  தொடர்பான பரிசோதனை எடுக்க எடுப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கொள்ளணும்.  இரத்த ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும் குழந்தைகளுக்கு உணவு பழக்கவழக்கங்கள் அந்த கார்டில் எழுதப்பட்டு இருக்கும் உணவு பழக்க வழக்கங்களில் எந்தெந்த மாறுதல் கொண்டு வர வேண்டும் சுத்தமாக வைத்தால் குடல் புழு மாத்திரை ஆண்டுக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் பற்றி மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும் மருத்துவர்கள் உங்களுக்கு இதை விரிவாக கூற உள்ளார்கள். இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படும் நாம் வாரவாரம் இரும்பு சத்து மாத்திரை கொடுப்போம் வியாழக்கிழமை. ஆனால் அது ரத்த சோகை தடுப்பு நடவடிக்கை  தான் இரத்த சோகை வராமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தினமும் அவர்களின் ஹீமோகுளோபின் அளவை பொறுத்து தினசரி இரண்டு முறையா அல்லது தினசரி ஒரு முறை மருத்துவர் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாத்திரை கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் குறிப்பாக மாணவிகள் பள்ளிக்கூட வளாகத்திலேயே மாத்திரை கண்டிப்பாக எடுப்பதை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.




 


இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சி.சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தெய்வநாதன், இணை பேராசிரியர் மரு.முன்னா முகமது ஜபார், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.மணிவண்ணன் (தொடக்க்க்கல்வி), திரு.கன்னிசாமி (இடைநிலைக்கல்வி) திரு.கனகராஜ்(தனியார்கல்வி) மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.