தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 ஆம் தேதி வரை 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அனேக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மேகக்கூடங்கள் நகர்வை பொறுத்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)


ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 19, கொளத்தூர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 15, அம்பத்தூர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை மாவட்டம்) தலா 14, தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்), சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை மாவட்டம்) தலா 13,  அம்பத்தூர் (சென்னை மாவட்டம்), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை மாவட்டம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாவட்டம்), மதுரவாயல் (சென்னை மாவட்டம்), புழல் (திருவள்ளூர் மாவட்டம்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் மாவட்டம்) தலா 12  செ.மீ மழை பதிவாகியுள்ளது.


 அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாவட்டம்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை மாவட்டம்), மண்டலம் 03 புழல் (சென்னை மாவட்டம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்), வளசரவாக்கம் (சென்னை மாவட்டம்), நந்தனம் (சென்னை மாவட்டம்), பெரம்பூர் (சென்னை மாவட்டம்) , முகலிவாக்கம் (சென்னை மாவட்டம்), மண்டலம் 13 அடையாறு (சென்னை மாவட்டம்), கத்திவாக்கம் (சென்னை மாவட்டம்), பள்ளிக்கரணை (சென்னை மாவட்டம்) தலா 11,


தேனாம்பேட்டை (சென்னை மாவட்டம்), பெருங்குடி ( சென்னை மாவட்டம்), மீனம்பாக்கம் AWS ( சென்னை மாவட்டம் ), சோழவரம் ( மாவட்டம் திருவள்ளூர் ), ஆலந்தூர் (சென்னை மாவட்டம்), அடையாறு (சென்னை மாவட்டம்), வானகரம் (சென்னை மாவட்டம்) தலா 10, கொளப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்), அண்ணாநகர் (சென்னை மாவட்டம்), திருக்குவளை (நாகப்பட்டினம் மாவட்டம்), எம்ஜிஆர் நகர் (சென்னை மாவட்டம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை மாவட்டம்), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்), சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்), தரமணி (சென்னை மாவட்டம்), பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


வடகிழக்கப்பருவமழை பொறுத்த வரையில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒன்று முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 32 சென்டிமீட்டர் இயல்பு அளவு 35 சென்டிமீட்டர்  எனவும் இது எட்டு சதவீதம் குறைவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகும் புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்த திசையை நோக்கி நகரும் என்பது பொறுத்து தமிழகத்திற்கு மழை இருக்குமா என்பது குறித்து தெரிய வரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.