கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்பு
தமிழகத்திலேயே முதல் முறையாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் துவங்கப்பட்டுள்ள சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளில் மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனைத் தடுப்பது, பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் நடவடிக்கைகளில் ஏற்படும் மாறுபாடு உள்ள குழந்தைகள், ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆறு வயதிற்குள் செயல்திறன் பயிற்றுநர் மூலம் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் மற்ற குழந்தைகளைப்போல் செயல்பாடுகளை மாற்ற முடியும்.
அரசு தனியார் கூட்டு அடிப்படையில் (Public Private Partnership) இரண்டு செயல்திறன் பயிற்றுநர்களை (Occupational Therapist) நியமித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 2023 மார்ச் மாதம் முதல் தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு செயல்திறன் நுட்புநர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடத்தைகளை சீராக்குவதற்கான பயிற்சிகள், சமூக வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு சிகிச்சை (ABA THERAPY) உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
இதுவரை 76 குழந்தைகள் ஆட்டிசம் மையத்தில் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வருகின்றனர். சிறப்பு குழந்தைகளுக்கான இந்த பயிற்சி மையத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்