அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அன்பார்ந்த வாசகர்களே கன்னி ராசிக்கு நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குரு பகவான் 11ஆம் வீடான லாபஸ்தானத்தில் பிரவேசிக்கிறார்... உங்களுக்கு வாகனங்கள் இல்லையே என்ற ஏக்கம் இருந்திருந்தால் தற்பொழுது நல்ல மனதிற்கு பிடித்த வாகனத்தை வாங்கி மகிழுங்கள்... நிலம், இடம் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும்... ஒரு வேளை பத்திரப்பதிவு ஆகாமல் இருக்கும் நிலங்கள் கூட தற்பொழுது உங்கள் பெயருக்கு பதிவாக வாய்ப்பு உண்டு.... நல்ல நிம்மதியான உறக்கம் அருமையான உணவு என்று பொழுது கழியும்... அக்டோபர் 18ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர் ஆகிறார்.... இந்த அதிசார குரு பெயர்ச்சி மற்ற எந்த ராசியை விடவும் உங்களுக்கு மிகவும் உபயோகமானதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக போகிறது....
குறிப்பாக குரு பகவான் தங்களுடைய சொந்த நட்சத்திரத்தில் செல்லும் காலத்தில் நான்கு மற்றும் ஏழாம் வீடான வீடு வண்டி வாகனம் தாயாரின் உடல்நிலை மற்றும் ஏழாம் இடமான களத்தரம் போன்றவை உங்களுடனே இருக்க போகிறது...
நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு இதுதான் பொன்னான வாய்ப்பு... அந்த காலகட்டத்தில் வருகின்ற வரங்களை நீங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லி சண்டே ஏதாவது போட்டுவிட்டு டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு பெரிய நேரம் அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தற்பொழுது முடிவாகின்ற வரன்களை நிச்சயம் செய்துவிட்டு திருமணத்தை ஏப்ரலுக்கு பிறகு வைத்துக் கொள்வது மிக சிறப்பு... குரு பகவான் சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலகட்டத்தில் உங்களுக்கு ஆறு மற்றும் ஐந்தாம் பாவங்கள் மிக அற்புதமாக வேலை செய்து குழந்தை பேருக்கான வாய்ப்புகளும் கடன் அடைதல் போன்றவையும் நிறைவேற அதிகப்படியான அம்சங்கள் உள்ளது கடன்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை தீர்ந்து ஒரு வழியாக உங்களுக்கு நிம்மதியை கொண்டு வரும் அதேபோல குரு பகவான் புதனின் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் செல்லும்போது உங்களுடைய பெயர் புகழ் அதிகரிக்கும் புதிய வேலைகள் கிடைத்து உங்களுக்கு இடம் மாறுதலும் உண்டாக வாய்ப்பு உண்டு எனவே இந்த அதிசார குரு பெயர்ச்சியின் சக்திகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதிகமான மாதங்கள் இல்லை என்றாலும் சொற்ப மாதங்களை உங்களுக்கு இருக்கின்றன அப்படியான காலகட்டங்களில் வியாழக்கிழமை தோறும் குரு பகவான் கோவிலுக்கு சென்று நவகிரகத்தில் இருக்கும் குருவுக்கு நல்லெண்ணெய் தீபம் போட்டு தொடர்ந்து வழிபட்டு வாருங்கள் உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்....