திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து கணிக்கர் பழங்குடியின மக்கள் குடுகுடுப்பை சார்ந்த இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இன வகுப்பை சார்ந்தவர்களுக்கு காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடுகுடுப்பை சார்ந்தவர்களுக்கு இந்து கணிக்கர் பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.


சாதிச்சான்றிதழ்:


இந்த நிலையில் சான்றிதழ் வழங்குவது குறித்து தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இது வரை கணிக்க இன பழங்குடியின சாதிச்சான்று வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக திருவண்ணாமலை கோட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை முறையிட்டும் தங்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்கப்பட்டவில்லை. என்றும்,


 




 


இதனால் தங்களது குழந்தைகள் உயர்கல்வி கற்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கணிக்கர் இன மக்கள் குற்றம் சாட்டினர். தங்களுக்கு உடனடியாக பழங்குடியின சான்று வழங்க கோரி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவண்ணாமலை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் திடீர் என ஆட்சியர் நுழைவாயில் முன்பாக சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லாத வகையில் காவல்துறையினர் இரும்பு கதவுகளை மூடி உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




 


இதுகுறித்து குடுகுடுப்பை இன துணை தலைவர் அய்யனார் கூறுகையில்; 


எங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 2000 ஆண்டு உயர் அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்துள்ளோம். அதே ஆண்டு சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட பகுதியில் இருந்து சென்னை குடுகுடுப்பை இன மாநாடு நடத்தி அதில் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளோம்.


எங்களுடைய பிள்ளைகள் 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரையில் படிப்பதற்கு பள்ளியில் சான்றிதழ் கேட்கவில்லை, எங்கள் பிள்ளைகள் 10-வகுப்பு சென்ற பிறகு பள்ளியில் சான்றிதழ் கேட்கிறார்கள், இல்லை என்றால் எங்களுடைய பிள்ளைகளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். இதனால் எங்களுடைய பிள்ளைகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாங்கள் வெளியூர்களில் சென்றால் அவர்கள் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள் இல்லை என்றால் அது மிக பிரச்சினையாக உள்ளது.


எங்கள் கிராமத்தில் உள்ள பிள்ளைகள் மூன்று பேர் சென்னையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள், அவர்கள் வேலைக்கு செல்ல சாதி சான்றிதழ் வேண்டும், எங்களுடைய பிள்ளைகள் மேலும் மேலும் படிக்க வேண்டும், எங்களுடைய தொழில் எங்களுடன் முடிய வேண்டும். எங்களுடைய பிள்ளைகளாவது அரசு வேலைக்கு போகவேண்டும் என கூறினார்.