திருப்போரூர் முருகன் கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.


ஐப்பசி மாதம் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.


முதல் நாள் கொடி மரத்தில் கோடி ஏற்றப்பட்டு பின்னர் 6-ஆம் நாள் சுரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் கட்சி நடைபெறும் இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.


அந்த வகையில் ஐப்பசி மாதம் 16-ஆம் நாள் திருப்போரூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி லட்ச அர்ச்சனை பெருவிழா இன்று முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கந்த சஷ்டி லட்ச அர்ச்சனை பெருவிழவை ஒட்டி திருப்போரூர் முருகன்கோயில் வட்டமண்டபத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.


பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை செய்தனர். இதில் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.


முக்கிய திருவிழாக்கள் நாட்கள் என்ன ?


அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 7ஆம் நாள் நடைபெறும் கந்த சஷ்டி லட்சாசனை திருவிழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கிளி வாகனம், ஆட்டுக்கடா வாகனம், புருஷன் மிருக வாகனம், பூத வாகனம், வள்ளி அன்ன வாகனம் மற்றும் யானை வாகனங்களில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார், 


கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்வு வருகிற 7ஆம் தேதி மாலை நடைபெறும். மறுநாள் 8ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்ற உள்ளது. சூரசம்கார நிகழ்வின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் சூர பக்தனை வதம் செய்யும் காட்சியை கண்டு கலைத்து பின்னர் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.


அருள்மிகு கந்தசாமி கோயில் வரலாறு ( Thiruporur Kandaswamy Temple )


சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய முருகர் கோவில்களில் திருப்போரூர் கந்தசாமி கோயிலும் ஒன்று. கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும்.


திருச்செந்தூரில் கடல் மார்க்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.


தந்தை சிவபெருமானை போலவே, திருப்போரூர் முருகன் சுயம்பு மூர்த்தமாக, தோன்றியவர் என்கிறது தல புராணம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி இருப்பதால் இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுவதில்லை. மூலவருக்கு பதிலாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.