பள்ளிச்செல்லும் வயதில் கணினி மொழியான programming languages ஐ கற்று பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவைய சேர்ந்த மாணவர் ஒருவர் .



கணினி மொழியில் ஆர்வம் :


குழந்தைகள் எப்போதுமே புது புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதற்கான சரியான வழிக்காட்டுதலும் உந்து சக்தியும் இருந்தால் மட்டும் போதும் அவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படித்தான் இளம் வயதிலேயே சாதனையாளராக  மாறி , பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் அர்னவ் சிவ்ராம். அர்னவ் சிவ்ராமிற்கு வயது  13 தான் ஆகிறது ஆனாலும் பொறியாளர்களுக்கே சவாலாக இருக்கும் 17  programming languages கற்று தேர்ந்திருக்கிறார்.


 






எதிர்கால திட்டம் :



இக்காலத்து குழந்தைகளுக்கு மொபைலும் கணினியும் தவிர்க்க முடியாத கேட்ஜெட்டுகளாக மாறிவிட்டன. அப்படித்தான் அர்னவ் சிவ்ராமிற்கு ஆரம்ப பள்ளியிலேயே கணினியின் மீது ஈடுபாடு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதனை தெளிவாக உணர்ந்த அர்னவின் பெற்றோர்கள் , அவர் 4 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே கணினி மொழிகளை கற்றுக்கொள்ள ஊக்குவித்திருக்கின்றனர். வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அர்னவ் தற்போது ஜாவா & பைதான் உட்பட 17 புரோகிராமிங் மொழிகளைக் ஃபிங்கர் டிப்பில் வைத்திருக்கிறார்.


அர்னவை போலவே இன்னும் சில குழந்தைகளும் கணினி மொழிகளில் வல்லவர்களாக இருக்கின்றனர். அந்த பட்டியலில் தானும் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறும் அர்னவ் எதிர்காலத்தில் மென்பொறியாளராக வேண்டும் என்கிறார். குறிப்பாக இந்தியாவில் ஆட்டோ பைலட்டுக்கான செயற்கை நுண்ணறிவை குறைந்த முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார். சிறுவனின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் !