ஆவேசமாக பாய்ந்து வந்த அர்ஜுன் சம்பத்.. அசராத மதிவதனி.. பெரியாரே துணை என்ற சத்யராஜ்

மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி தாக்கும் நோக்கில் ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

தனியார் தொலைக்காட்சி மேடை விவாத நிகழ்ச்சி ஒன்றில், வழக்கறிஞர், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, கனிமொழி எம்.பி உள்ளிட்ட பிரபல பிரபலங்கள் அர்ஜுன் சம்பத்துக்கு தங்களின் வன்மையான கண்டனங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement

தற்போது இச்சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சத்யராஜ், ”திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான மதிவதனி, பொது விவாத மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, அநாகரீகமான முறையில் அர்ஜுன் சம்பத் தாக்கும் நோக்கத்தில் பாய்ந்து வந்திருக்கிறார். தன்னை தாக்க வரும்போது பயந்து பின்வாங்குவதோ, அல்லது அடிக்க முன் பாய்வதோதான் சாதாரணமாக நடக்கும் விஷயம்.

ஆனால் மதிவதனி அசராமல் துணிச்சலாக நிற்கிறார். இதைவிடவும் எதிராளிக்கு சரியான பதிலடியைக் கொடுக்கமுடியாது. ப்ப்ப்பா.. அத்தனை துணிச்சல். பெரியாரின் வழிவந்தவர்கள் இத்தனை துணிச்சலுடன்தான் இருப்பார்கள். மதிவதனி அவர்களே தலைவணங்குகிறேன்” என பேசியுள்ளார்

Continues below advertisement