திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேரூராட்சி பகுதியில்  காந்தி சாலையில் பல வருடங்களாக அரசு டாஸ்மாக் மதுப்பானக்கடை இயங்கி வருகின்றது. இந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் அங்கேயே சிலர் மது அருந்தியும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஓரு போதை ஆசாமி  குடிபோதையில் மதுபான கடையில் கலாட்டா செய்துள்ளார்.  இதனால் ஆரணி நகர காவல்நிலையத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையின் மேற்பார்வையாளர்  புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் நகர காவல்நிலைய காவலர்கள் டாஸ்மாக் மதுபான  கடைக்கு அடிக்கடி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுக்கும் பொருட்டு வந்துள்ளனர்.



மேலும் அப்போது டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை காவலர்கள் மிரட்டும் பாணியில் அமைத்துள்ளனர். இதனால் பயந்த போதை வாலிபர் காவலர்கள் வாலிபர் அருகே சென்றதும் ஓட்டம் பிடித்தார். இதனை கண்ட காவல்துறையினர் போதை வாலிபரை பின் தொடர்ந்து சென்றனர்.  அதனைத்தொடர்ந்து போதை வாலிபர் எங்கு செல்வது என்று தெரியாமல் நகர் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகூடத் தெரு பகுதியில் ஓட்டம் பிடித்து பின்னர் பழை பேருந்து நிலையம் எதிரில் வரிசையாக உள்ள கடைகளின் மேற்கூரையில் ஏறி நின்றுள்ளார் போதை வாலிபர். பின் தொடரந்து சென்ற காவல்துறையினர் போதை வாலிபரை கீழே இறங்கி வரும்படி காவலர்கள் அறிவுறுத்தனார்கள்.



அப்போது போதை வாலிபர் காவலர்களிடம் நான் எந்த தப்பு செய்யவில்லை தப்பு செய்தால் கேளுங்கள் என்றும் உங்களை கண்டதும் நான் ஓடிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் என்னை நீங்கள் பிடிக்க நெருங்கினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மேற்கூரையின் மீது உள்ள தகடுகளை  எடுக்க முயன்றார். ஆனால் தகடு எடுக்க முடியவில்லை. பின்னர் காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் போதை வாலிபர் ஒரு மணி நேரம் காவல்துறையினரை அலைகழித்து தண்ணீர் காட்டிய பின்னரே மற்றும் காவல்துறையினர் வாலிபரிடம் சமரசம் கூறிய பிறகே வாலிபர் கீழே இறங்கி வந்துள்ளார். இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. 



மேலும் போதை வாலிபரை ஆரணி நகர காவல்நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்று காவலர்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையில்  போதை வாலிபர் வேலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் ஆரணி பகுதிக்கு ஏன் வந்துள்ளார் என்றும் இவர்மீது  குற்ற வழக்குகள் உள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். ஆரணியில் போதை வாலிபர் கடைகளின் மேற்கூரையில் ஏறி காவல்துறையினருக்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.