சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 12 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வேலூர் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு ஐஜி கபில்குமார் சரத்கர், சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திற்கு ஏடிஜிபி வன்னியபெருமாள், திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏடிஜிபி வினித்தேவ் வான்கடேவும், மதுரை மாவட்டத்திற்கு ஏடிஜிபி ஜெயராம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஐஜி சுமித்சரண், நெல்லை மாவட்டத்திற்கு ஐஜி அபின் தினேஷ் மோடக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐஜிக்கள் தினகரன், அருண் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளை துரித்தப்படுத்துவார்கள்.




முன்னதாக, சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  கமல் கிஷோர் ஐஏஎஸ், கணேசன் ஐஏஎஸ், சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், டிஜி வினய் ஐஏஎஸ், மகேஷ்வரி ரவிகுமார் ஐஏஎஸ், பிரதீப் குமார் ஐஏஎஸ், சுரேஷ் குமார் ஐஏஎஸ், பழனிசாமி ஐஏஎஸ், ராஜாமணி ஐஏஎஸ், விஜயலக்‌ஷ்மி ஐஏஎஸ், சங்கர் லால் குமாவத் ஐஏஎஸ், நிர்மல்ராஜ் ஐஏஎஸ், மலர்விழி ஐஏஎஸ், சிவஞானம் ஐஏஎஸ், வீர ராகவ ராவ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பார்கள். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதை உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்வார்கள்.


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண