அன்னப்பூரணி  அரசு அம்மாவின் கருணையால், பாதியில் நின்ற எலக்ட்ரிக் பைக்கை என்னிடம் இருந்தபோதும் கூட தான் நடக்க வில்லை என பக்தர் ஒருவர் கூறியிருக்கிறார்.


கடந்த மாத இறுதியில் தலை நிறைய பூ, பட்டுப்புடவையில் தோற்றம், பக்தர்களின் கரகோஷம் என ஒரே நாளில் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தார் அன்னப்பூரணி அரசு அம்மா. தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறும் அவரை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார் என்ற செய்தி பரவ ஆரம்பித்ததுமே, கடந்த 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்னொரு பெண்ணின் கணவரை 2 ஆவது திருமணம் செய்ய இவர் பங்கேற்றதாக கூறி அது தொடர்பான வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர்ந்தனர்.                                     
                                                       


ஆனால் அனைத்தையும் அசால்ட்டாக எதிர்கொண்ட அன்னப்பூரணி தொடந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். செங்கல் பட்டு மாவட்டத்தை பூர்விகமாக இவர் தற்போது தனி ஆசிரம் தொடங்கியதோடு தனி யூடியூப் சேனல்  வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில், தனி ஆளாக தனி அறையில் கதவை சாத்திக்கொண்டு இருப்பது தியானம் இல்லை என்று கூறும் அவர் கோயிலுக்கு சென்று வழிபடுவது, பஜனை செய்வது உள்ளிட்டவையெல்லாம் ஆன்மீகமே இல்லை குண்டுகளை தூக்கிப் போட்டுள்ளார்.


                                                                                                                                 


இதற்கெல்லாம் உச்சமாக, அவரின் பக்தர் ஒருவர் அன்னப்பூரணி அம்மாவின் ஆன்மீகவகுப்பில் பங்கேற்ற பின்னர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓடியது என்று கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதி அவர் கூறும் போது, “  நான் இப்போது இ - பைக் வைத்திருக்கிறேன். 44 கிலோமீட்டர்தான் கொடுக்கும். ஆனால் நான் ஷோரூமுக்கு செல்வதற்கு 70 கிமீ செல்ல வேண்டும். 44 கிமீட்டரிலேயே பேட்டரி ஆஃப் ஆகிவிட்டது. உடனே நான் பக்கத்தில் பார்த்தேன். அம்மா பெயர் வைத்த ஹோட்டல் ஒன்று இருந்தது. இதுக்கு மேல சார்ஜ் போடணும்னா அம்மா பாத்துக்குவாங்கன்னு விட்டுட்டேன். பைக் ஓடுச்சு.. அப்படியே அவங்க என்னைய எங்கேயும் நடக்கவிடலை” என்று பேசியுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.