அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க தினம் அக்கட்சியினரால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அக்கட்சி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று.  தொண்டர்கள் பலத்தையும்
மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம், 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா. சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள். அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக  எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என தமிழ்நாடு சார்பில் வாழ்த்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.






அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதிமுக கொடியையும் ஏற்றினார்கள். அத்துடன் பொன்விழா மலரை வெளியிட்டு இனிப்புகள் வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளனர். 


 






முன்னதாக, சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அதிமுக கொடி ஏற்றினார்.  அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டும் திறக்கப்பட்டது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண