உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”ஆதியோகி முன்பு நாம் நின்று கொண்டு இருக்கிறோம். யோகாவை வாழ்வியல் முறையை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். சர்வதேச யோகாவை உலகம் முழுவதும் இந்தியர்கள் எடுத்து செல்கின்றனர். பிரதமர் ஸ்ரீ நகர் பகுதியில் யோகா செய்து வருகிறார். நாம் இன்று இங்கு யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். இன்று கிரிய பயிற்சி செய்து உள்ளோம்.


மன அழுத்தத்தின் ஆரம்ப புள்ளியாக செல்போன் பயன்பாடு வந்துள்ளது. தற்கொலை வரைக்கும் சோசியல் மீடியா கொண்டு சென்றுள்ளது. நம்முடைய வாழ்வியலை உள்நோக்கி பயணம் செய்ய வேண்டும். காலம் வேகமாக நம்மை ஓட வைக்கின்றது. தனிமையாக இருந்தாலும் இன்பமாக வழ வேண்டும். ஈஷா அரசியல் சார்ந்த பகுதி இல்லை. இங்கு அரசியல் பேசுவது சரியில்லை. பள்ளிக்கல்வி துறையில் யோகா கொண்டு வர வேண்டும். புதிய கல்வி கொள்கையில் யோகா இடம்பெறும் அம்சங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் யோகா கட்டயா பாடமாக கொண்டு வர வேண்டும்.  நான் படித்த படிப்பிற்க்கு, நான் வாங்கும் மார்க், நான் செய்யும் வேலைக்கு சம்பந்தம் இல்லை. விருப்பம் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து கல்வி கற்பது தான். நல்ல புரிதல் இருக்க வேண்டும். யோகா டி அடிக்க்ஷன் ரொம்ப முக்கியமானது.


கள்ளு கடை திறக்க வேண்டும்


கள்ளக்குறிச்சி போன்ற சம்பவத்தை பார்த்து நமக்கு டி அடிக்க்ஷன் தேவை. மது போதை அதிகம் உள்ளது.. ஈசா யோகா பிரச்சனைக்குரிய இடம், அங்கு அரசியல் பேச விரும்பவில்லை. மின் மயானம் விவகாரம் குறித்து நான் பேசவில்லை. நீதிமன்றம், காவல்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். நான் காவல் துறையில் இருக்கும் போது, மன அழுத்தம் அதிகளவில் இருந்தது அப்போது அதிலிருந்து வெளிப்பட ஈஷாவிற்கு வந்தேன்.மன அழுத்தம் வெளியே வர யோகா எனக்கு மிகப்பெரிய கருவி. கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்களால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.  தாமரை இலை போல் தண்ணீர் போன்று இருக்க வேண்டும். அதற்கு யோகா உதவி செய்யும்.


பெண்கள் என்னை கட்டி அழுதது என்னை அதிகளவில் பாதித்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் பணம் கொடுப்பது என பார்க்கிறோம். ஈம காரியம் செய்ய கூட பணம் இல்லை. அந்த குடும்பம் கஷ்டம் வெளியே வர பணம் கொடுக்கிறோம். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. பாஜக சார்பிலும் 1 இலட்சம் அறிவித்துள்ளோம். தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை. கள்ளு கடைகள் கொண்டு வரும் நேரமிது. குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையாக கள்ளு கடை திறக்க வேண்டும். முதலில் 1000 கடை அடைக்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகள் கூட வேண்டும். அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது. மது விற்பனை, கள் விற்பனை அரசு கண்காணிக்க வேண்டும். அரசிற்கு வருமானம் வரட்டும். அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை சரியில்லை. முதலமைச்சர் கையில் இருக்கும் துறையில் பிரச்சனை உள்ளது. இளைஞர்களிடம்போதை பழக்கம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.