அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் தேர்வுகளாக மீண்டும் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ’புதிதாக நடத்தப்படும் தேர்வுகளுக்குக் கட்டணம் கிடையாது. அதிகப்படியாக எந்த பருவத்தேர்வில் மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே அவர்களது மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் கொரோனா காரணமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. ஆனால் இணையக் கோளாறு காரணமாகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறுதேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
'அண்ணா பல்கலை தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்' - உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு..
ABP NADU | 10 May 2021 08:32 PM (IST)
புதிதாக நடத்தப்படும் தேர்வுகளுக்குக் கட்டணம் கிடையாது. அதிகப்படியாக எந்த பருவத்தேர்வில் மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே அவர்களது மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்
அண்ணா பல்கலைக்கழகம்