விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


விழுப்புரம் அருகே உள்ள குண்டாலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்களுக்கு பாலியல் தொல்லை, மற்றும் அடித்து துன்புறுத்தல்களுக்கு ஆளக்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி  அவரது மனைவி மரியா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரமத்தில் இருந்த 15 பேர் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணி பல்வேறு மாநிலங்களில் தனிப்படை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரனை மேற்கொண்டனர். இந்நிலையில் முண்டியம்பாக்கத்திலுள்ள  விழுப்புரம் அரசு தலைமை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் சுனில் குமார்மீனா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரான பட்டில்கேட்டன் பலி ராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜீ உள்ளிட்டோர் நேரில் விசாரணை செய்தனர்.


மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 14 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 20 பேர்களிடமும் அந்த குழு தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே தேசிய, மாநில  குழந்தைகள் ஆணையம், மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் செய்து வருகின்றனர். இவ்வழக்கில் ஆணையங்களின் தனி தனி அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.