கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுக்கிணங்க ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்திற்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர் வளாகத்தின் அருகே உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது இதில் தானாக முன்வந்து இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இப்பணியை கரூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஐயர்சாமி முன்னிலையில் மற்றும் மருத்துவர் சக்திவேல் மேற்பார்வையில் நடைபெற்றது. தடுப்பூசி மையத்தில் "கோவாக்ஸின்" எனப்படும் முதல் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டது.




மேலும் இந்த தடுப்பூசி முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுபோன்று அனைத்து வகை பணியாளர்களுக்கும்  கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை போட்டு கொள்கின்றனர். சிறப்பு முகாம் மூலம் மின்சாரவாரிய ஊழியர்களுக்கு, மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் மூலமே தடுப்பூசி போடப்பட்டது. 




கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்றை கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டது மட்டுமின்றி, கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் காவல்துறையினருக்கு ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைமை காவலர் பாஸ்கரன், மனைவி தனலட்சுமி கூறுகையில் - தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் எங்களது காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து தாய்மார்களும், முதியவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றும் காவலர்கள் போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகும். அதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.


கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுக்கிணங்க, நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான காவல் துறை நண்பர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் இருபால் காவல்துறை அதிகாரிகளும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.