ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொண்டரை தாக்கியது, சாலை மறியலில் ஈடுப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். தேர்தல் நடத்தை முறைகளை மீறி  சாலை மறியல் செய்ததாக 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.


தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து, பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். 


கடந்த 25ம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விவாதத்தின் போது ஜெயக்குமார் தரப்பும், அரசு தரப்பும் மாறிமாறி தங்களது வாதங்களை முன்வைத்தனர். தங்கள் தரப்பை பேசிய ஜெயக்குமார் தரப்பு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் பெயிலில் வெளிவரக்கூடிய பிரிவுகள் எனவே ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டது. ஆனால் அதனை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு,  ஜெயக்குமார் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307-கொலை முயற்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியுள்ளார். சாவடிங்கடா என வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார். அதை கருத்தில் கொண்டு 307 போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.  









இந்த வாதங்களுக்கு எல்லாம் மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு, 307-க்கான குற்றமே நடக்கவில்லை. புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடக்கூட இல்லை.  காயம் எதுவுமில்லை, எந்த அடிப்படையில் 506(2)- கொலை மிரட்டல் போடப்பட்டது. கொலை மிரட்டலே இல்லாத போது கொலை முயற்சி எப்படி வந்தது என கேள்வி எழுப்பினர்.  வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் இரண்டாவது வழக்கில் மார்ச் 9வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண