தங்கம் வாங்க அட்சய திரிதியை(Akshaya Tritiya) நாள் உகந்தது! நகைக்கடை விளம்பரங்களில் சொல்லக் கேட்டு நமக்குத் தெரிந்தது இவ்வளவு மட்டுமே. உண்மையில் இந்த அட்சய திரிதியை தினத்துக்குப் பின்னால் பெரும் புராணமே உள்ளது. இது இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படுகிறது.


அட்சய திரிதியை வரலாறு: அட்சய திரிதியை அல்லது அட்சய் தீஜ் என்றழைக்கப்படும் இந்த நாள் இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இது ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திரிதியை நாள் நம்பப்படுகிறது.


மேலும் இந்துப் புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திரிதியை நாள் கொண்டாடப்படுகிறது. பரசுராம முனிவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திரிதியை நாளில் தான் திரேதா யுகம் தொடங்கியது என்று நம்பப்படுகிறது. மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்துக்களுக்கு இத்தனை அடையாளங்களைக் கொண்ட இந்நாள் சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிஷபதேவரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.




இந்த ஆண்டு அட்சய திரிதியை என்று வருகிறது?
இந்த ஆண்டு அட்சய திரிதியை நாளானது மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.


அட்சய திரிதியை பூஜை நேரம் எது?
அட்சய திரிதியை பூஜை நேரமானது அதிகாலை 05:39 மணி முதல் மதியம் 12:18 மணி வரை. இந்த நேரத்தில் பூஜை செய்தால் எல்லா நலமும் வளமும் பெறலாம்.


திரிதியை தொடங்கும் நேரம்: அதிகாலை 05:18 மே 03, 2022
திரிதியை முடியும் நேரம்:  காலை 07:32 மே 04, 2022


ஒவ்வொரு நகரத்தில் அட்சய திரிதியை முகூர்த்த நேரம் எது?
06:06 am to 12:32 pm - புனே
05:39 am to 12:18 pm - புதுடெல்லி
05:48 am to 12:06 pm - சென்னை
05:47 am to 12:24 pm - ஜெய்ப்பூர்
05:49 am to 12:13 pm - ஹைதராபாத்
05:40 am to 12:19 pm - குர்கான்
05:38 am to 12:20 pm - சண்டிகர்
05:18 am to 11:34 am - கொல்கத்தா
06:10 am to 12:35 pm - மும்பை
05:58 am to 12:17 pm - பெங்களூரு
06:06 am to 12:37 pm - அகமதாபாத்
05:38 am to 12:18 pm - நொய்டா


அட்சய திரிதியை என்பதன் அர்த்தம் என்ன?
அட்சய திரிதியை என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அட்சயா என்றால் வளம், வெற்றி, இன்பம், நம்பிக்கை. திரிதியை என்றால் நிலவின் மூன்றாம் பிறை. இந்த நாளானது இந்து காலண்டரின் படி சித்திரை மாதத்தின் மூன்றாவது சந்திர தினத்தில் வருகிறது.