திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாத காரணத்தால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி திணறி வருகிறார்.
மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டம் அடித்து வருகிறது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட, ஏர் இந்தியா விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "பெரிய விபத்து ஏதும் நிகழாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.