தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள 37  அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நீதி கூட்டமைப்பில் இணைய விருப்பமில்லை என்று அதிமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. 


அதில், "தங்களின் 02-02-2022 நாளிட்டக் கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்தக் கடிதத்தில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்க அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்தக் கூட்டமைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.


ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துக்களை உடையவர்களை அழைத்துப் பேசி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்பதை தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சி, சமூகநீதி என்றாலே மக்களின் நினைவிற்கு உடனடியாக வருவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்தான் என்பதை இந்தத் தருணத்தில் எடுத்துக்கூற கடமைப்பட்டிருக்கிறேன்.




தமிழ்நாட்டில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பினை பெறுவதிலும் அதிகப் பயன் பெற்று வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் 1980 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 மிழுக்காடாக உயர்த்தப்பட்டதுநாள், இது சமூக நீதிக்கான முதல் எடுத்துக்காட்டு.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் 52 விழுக்காடு இருக்க வேண்டுமௌ மண்டல் குழு பிரதாளமாக பரிந்துரைத்தும், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பட்டுமே வழங்க 1990 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு உந்தாவிட்டது. இதனைப் பாராட்டி 21-08-1990 அன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மண்டல் குழுவின் முக்கியப் பரிந்துரையான 52 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், கல்வியிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியதோடு, மண்டல் குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காத பத்திய அரசை கண்டித்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புாட்சித் தலைவி அப்பா அவர்கள். இது எமூக நீதிக்கான இரண்டாவது எடுத்துக்காட்டு,


1931 ஆம் ஆண்டைய கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 67 விழுக்காடாக இருப்பதால், இதர பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 27 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்று கருதிய பாண்புமிகு இதயதெய்வம் பாட்சி தலைவி அப்பா அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்ற பிறகு, 30-09-1991 அன்று மத்திய அரசு, மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியயற்றில் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்கள் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பியாருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமௌ மந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்னானம் இயற்றினார்கள். இது சமூக நீதிக்கான மூன்றாவது. எடுத்துக்காட்டு,


தமிழ்நாட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும். 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட வருப்பினருக்கும், ஒரு விழுக்காடு பழங்குடிவினருக்கும் என மொத்தம் ஐ விழுக்காடு இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான வழக்கினை விசாரித்த ஒன்பது - (நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிபன்று அரசியல் சாசனப் பிரிவு பிற்படுத்தப்பட்டோர். பட்டியலிலிருந்து முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டுமென்றும் பொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சரம்பை பிறக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது.


தமிழ்நாட்டின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது. தாங்கள் அனுப்பியுள்ள அடிதத்தில் தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதாவது இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தபோது, அதுபோன்ற எதுவும் இல்லை என்பதும், அரசியல் ஆதாயம்தான் மேலோங்கி இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து, நீட் தேர்வு ரத்து' போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: தஞ்சை மாவட்டத்தில் 459 பதவிக்கு 2865 பேர் வேட்பு மனு தாக்கல்