கொரனா தொற்று அதிகரித்தால் ஆன்லைன் மூலம் அஇஅதிமுக பொதுக்குழுவை நடத்தவும் மாற்று திட்டம் ! 


அஇஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் கொரனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமும் பொதுக்குழுவை நடத்த மாற்ற திட்டத்தையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.



இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலும் நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், கொரனாவை காரணம் காட்டி அரசு அனுமதி வழங்காதப்பட்சத்தில் இந்த மாற்று திட்டத்தை பயன்படுத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.


அதிமுக ஒற்றை தலைமை பிரச்னை:


அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாமல் அதிமுகவை ஒற்றை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஓபிஎஸ் தரப்பில் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. மேலும் இது தொடர்பான தீர்மானம் இயற்ற பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதன்காரணமாக வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பான முக்கிய தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக தெரிகிறது. 


நீதிமன்ற வழக்கு: 


அதிமுக பொதுக்குழு ஜூன் 23 ம் தேதி நடைபெற்றது. அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிம்ன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஜூலை 4 ஆம் தேதி இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண