சென்னை அடுத்த நாவலூர் அருகே உள்ள ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா என்பவரின் மகள் ஜெனிபர். இவர், சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கேளம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, “ஜெனிபர்க்கு 35- வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்தது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாகவும், அதனால் தினந்தோறும் இரவு ஜெனிபர் உறக்கம் இல்லாமல் தவித்து வந்ததால் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ஜெனிபரை நிறுவனம் திடீரென வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. வேலையை விட்டு நிறுத்தியதால் கடந்த சில நாட்களாக அதிக மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)