Jayakumar Press Meet: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து பலவேறு அதிரடி குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை என அவர் கூறியுள்ளார். 


மேலும் அந்த பேட்டியில், இதற்கு முன்னர் பாஜக தலைவர்களாக இருந்த பொன். ராதாகிருஷ்ணனும், தமிழிசை சௌந்திர ராஜனும் தலைமைப் பொறுப்பிற்கு மிகவும் பொறுத்தமானவர்களாக இருந்தன்ர். ஆனால் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை அந்த பொறுப்புக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாதவர் என கடுமையாக விமர்சித்தார். வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். மேலும், திமுக தான் பிரதான எதிரி, திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு தோழமைக் கட்சியான அதிமுகவை விமர்சிப்பதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலையின் பேச்சினை அதிமுக கண்டிக்கிறது என கூறினார். 


அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பிரதமராக மோடி வரவேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அண்ணாமலையில் நடவடிக்கைகளை பார்க்கும் போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரக்கூடாது, மீண்டும் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நோக்கத்துடன் தான் அண்ணாமலையின் நடவடிக்கைகள் இருக்கிறது. தற்போது உள்ள நிலவரப்படி, இன்றைய தினத்தில் தேர்தல் வைத்தால் கூட அதிமுக தலைமையிலான கூட்டணி, 30 பாராளுமன்ற தொகுதிகளை வெல்லும். இன்னும் 8 மாத காலம் உள்ள நிலையில் திமுகவின் மீதான அதிருப்தியால், அதிமுக 40 தொகுதிகளையும் வெல்லும் சூழல் ஏற்படும். 


இப்படி இருக்கும் போது வெண்ணெய் திரண்டு வரும் போது பானை உடைந்த கதையாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இவரது எண்ணம், தமிழ்நாட்டில் பாஜக அண்ணாமலை கூட்டண்யில் ஒரு இடம் கூட வெல்லக்கூடாது என நினைக்கிறார். மேலும் இவர் கர்நாடகாவுக்கு பிரச்சாரத்திற்கு சென்றார் அங்கு ஏன் பாஜக வெல்லவில்லை, இவர் சென்ற ராசி கர்நாடக அம்போ என போய்விட்டது. இவர் பிரச்சாரம் செய்யச் சென்ற கர்நாடகாவில் ஒரு காண்ட்ராக்டிற்கு 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் தற்கொலை செய்யக்கூட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்தெல்லாம் அண்ணாமலை பேச வேண்டியது தானே.  மறைந்த தலைவரைக் குறித்து பேசுவது என்பது ஏற்புடையதல்ல என்றார். 


கடந்த 20 ஆண்டுகளாக சட்டமன்றத்துக்குள் சென்றார்களா? இன்றைக்கு நான்கு பேர் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணம் , அதிமுக தானே காரணம். அதை மறுப்பாரா அண்ணாமலை. எங்களது தலைமையில் இருக்கும் போது தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுகவுடனான கூட்டணியை முறிக்கின்ற செயலாகத்தான் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார், அவரை அமித் அஷா மற்றும் நட்டா கண்டிக்க வேண்டும் என கூறினார்.