அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவரும் முன்னாள் எம்பியுமான கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற அதிமுக நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்துக்கு எதிராக விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும் மனூவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றும், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை ரத்து செய்யவும் கே.சி. பழனிசாமி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் நடைபெறுகிறது. நீதிபதி அப்துல் குத்தூஸ் மனுவை விசாரிக்கிறார்.
நேற்றுமுன்தினம் நடந்த அதிமுக செயற்குழுவில் முடிவு செய்த படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் தேர்தல்குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் படி, தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 3 வெள்ளக்கிழமையும், டிசம்பர் 4 சனிக்கிழமையும் நடைபெற உள்ளது. வேட்பு மனு பரிசீலனையானது டிசம்பர் டிசம்பர் 5 ம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெற டிசம்பர் 6 திங்கட்கிழமையும் நடைபெறும்.
டிசம்பர் 7 செவ்வாய் அன்று தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண: ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்