அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்,பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள் ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


7-ம் நாள் விசாரணைக்கு பின் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இரு பொதுக்குழுக்களிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதற்கான ஆதரங்கள் எங்கே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.   நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டுதான் கையெழுத்துகள் பெறப்பட்டதாக அ.தி.மு.க. தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் கையெழுத்திட்டு கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவருவதில் சிரமமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.