அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் பலியான நிகழ்வு அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன்:
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யப்பிரியா(29) இவர் மதுரை ஆராப்பாளையத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இரண்டு நாட்கள் தங்கிய பிறகு, நேற்று மாலை உதகமண்டலத்திலிருந்து ஆரப்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்
விபத்தில் சிக்கிய கார்:
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கல்லார் அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவை நெருங்கியபோது, காரை ஓட்டி வந்த போது பிரேக் பிடிக்காமல் பார்த்திபனின், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த மக்கள் அவர்களை உடனடியாக காரில் இருந்து மீட்டனர். இதில் திவ்யபிரியா மற்றும் உறவினரான பரமேஸ்வரிக்கு தலையில் காயம் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திவ்யப்பிரியா இறந்ததாக மருத்துவமனையில் அவரை சோதித்து பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பரமேஸ்வரி, வளர்மதி, ஐஸ்வர்ய ஆகியோர் சிகிச்சை பெற்று பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்ற அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதில் காரின் பிரேக் பிடிக்காமல் இருந்ததால் தான் கார் விபத்துக்குள்ளானது என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரங்கல்:
திவ்யபிரியா மறைவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தக் கடினமான நேரத்தில், அண்ணன் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வலிமையை, இறைவன் அவர்களுக்கு அருளட்டும். சகோதரி திவ்யப்பிரியா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.