வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.


மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று சட்டங்களையும் அரசு ரத்து செய்யவேண்டும் என தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள  பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான் வரிசையில் 7வது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் கூட்டாச்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் கூறுகையில், மண்னையும், விவசாயிகளையும் காக்கு வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை என்றும், வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரியவில்லை கிடைக்கும் வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளதாகவும் கூறினார். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளதாகவும், சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சி மிகு போராட்டம் நடந்தது இல்லை எனவும் கூறினார். மேலும், ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


 






இந்த நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிப்பு தெரிவித்து பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரையும், வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரையும் காத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


 






முன்னதாக, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மாநில அரசு உள்நோக்கத்தோடு இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எதிரானதாக இந்தத் தீர்மானம் இருப்பதாகவும் வெளிநடப்பு செய்த பாரதிய ஜனதா உறுப்பினர் கூறியுள்ளனர். வேளாண் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு காங்கிரஸ், பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  


 






முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இறுதிகட்டத்தை எட்டிவருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த தருணத்தில் விவசாயிகள் தனிப்போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.