Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?

Gas Cylinder: பட்ஜெட்டை முன்னிட்டு வணிக சிலிண்டர்கள்ன் விலை குறைக்கப்பட்டு இருப்பது வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

Gas Cylinder: பட்ஜெட்டை முன்னிட்டு வணிக சிலிண்டர்கள்ன் விலை குறைக்கப்பட்டு இருப்பது வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

வணிக சிலிண்டர் விலை குறைப்பு

சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, பிப்ரவரி மாதம் முதல் நாளான இன்று 19 கிலோ வர்த்தக உபயோக சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அதன் விலை ரூ. 1966ஆக இருந்தது. விலைக்குறைப்பை தொடர்ந்து இன்று ரூ.1959.50க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து கடந்த 31 நாள்களில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.21 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜன. 1ஆம் தேதியும் அதன் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டது. வணிக சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இன்றி, 818 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து குறையும் விலை

நிறுவனங்களின் தொடர்ச்சியான ஐந்து மாதாந்திர உயர்வுக்குப் பிறகு, கடந்த ஜனவரி மாதம் தான் வணிக சிலிண்டரின் விலை முதல்முறையாக குறைந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மாதமும் குறைந்துள்ளது. ஆகஸ்டு முதல் மொத்தமாக ரூ.172.50 அதிகரித்தத நிலையில் , கடந்த இரண்டு மாதங்களில்  ரூ. 21 ரூபாய் குறைப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான சிலிண்டர் விலை குறைப்பால், உணவகங்கள்  உள்ளிட்ட இடங்களில் விலைவாசி சற்று குறைப்பு செய்யப்பட  வாய்ப்பு இருக்கிறது.  விமான எரிபொருள் மற்றும் வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கான மாதாந்திர விலை திருத்தமானது, உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?

 

Continues below advertisement