ADMK : பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? ஈபிஎஸ், ஓபிஎஸ் யார் கை ஓங்கப்போகிறது..?

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

Continues below advertisement

அதிமுக இரட்டை தலைமை விவகாரம்:

Continues below advertisement

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய, மனுவை விசாரித்த நீதிபதிகள் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்:

பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. அதைதொடர்ந்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அவசரப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை ஏற்று பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளிக்க,  வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், ஓபிஎஸ் மனு தொடர்பாக பதில் அளிக்கும் படி ஈபிஎஸ் தரப்புக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

ஈபிஎஸ் பதில் மனு:

நீதிமன்ற நோட்டீசுற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர் செல்வத்திற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டதாகவும்,  அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கட்சியின் நலனை கருத்தில் கொண்டே ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற ஓ.பன்னீர் செல்வம் தகுதியற்றவர்  எனவும் ஈபிஎஸ் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மனுக்களை ரத்துசெய்யக் கோரிக்கை:

அதிமுக பொதுக்குழு நடத்ததான் ஓபிஎஸ் தடை கேட்டாரே தவிர, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. எனவே ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை ரத்து  செய்ய வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

Continues below advertisement