அதிமுக பொதுக்குழு வழக்கு 127 பக்க தீர்ப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ”ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை”. "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா" என்பது பற்றி பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும். ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் ஜூன் 23க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால், அது கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும்”.
அதிமுக பொதுக் குழு செல்லும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி அறிவித்தது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது எனவும் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்ற வகையிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமை அதிமுக பலம் பெறவும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழக தலைவர் திரு.வி.கா தலைமையில் அதிமுகவினர் கரூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன்னதாக அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலம் சென்று கழகத்தின் காவலர் "எடப்பாடியார் வாழ்க" என கோஷங்கள் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகரக் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட துணை செயலாளர் அலம் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கே.எல்.ஆர்.தங்கவேல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், கரூர் சேர்மன் பாலமுருகன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் குணா, ஒன்றிய செயலாளர்கள் மார்கண்டேயன், மதுசுதன், எம்.ஆர்.கே.செல்வகுமார், கலையரசன், ஈஸ்வரமுர்த்தி, கடவூர் ரமேஷ், வி.சி.கே.பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் சி.பி.பழனிசாமி, அரவிந்த், நகர செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், பகுதி செயலாளர்கள் விசிகே ஜெயராஜ், சேரன் பழனிச்சாமி, சக்திவேல், அண்ணமார் தங்கவேல், ஆண்டாள் தினேஷ் குமார், சுரேஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆகையால் பேருந்து நிலையம் அருகில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.