உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேகமாக பரவி கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்வீட் செய்துள்ளார். தனிமையை வெறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகைகள் மீனா, த்ரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குநனர் ப்ரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்