விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் தாய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்னர், சிறுமி புதுச்சேரியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்து, முட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வந்த சிறுமி, அவரது பெரியம்மாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.


இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.



கோப்புப்படம்


மேலும் பல்வேறு செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கொரோனா பரவலை மறந்து பாஜக சார்பில் கபடி போட்டி- சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கபடி கபடி


இது பற்றி உறவினர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, விழுப்புரம் அருகே உள்ள ஈச்சங்குப்பத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் (வயது 81),  ராஜாமணி என்பவரின் மகன்  இளையராஜா (28), மற்றும் சிறுமிக்கு அண்ணன் முறையில் உள்ள மோகன் (வயது 32) ஆகியோர் தன்னை தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மண்ணாங்கட்டி, இளையராஜா, மோகன் ஆகியோரை கைது செய்தனர்.


போக்சோ சட்டம் என்றால் என்ன?


போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண