தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் மாணவர்களிடம் அத்துமீறிய நபரை தூக்கிலிட வேண்டும், அது மூலம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளும் இது போன்ற குற்றங்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவார்கள்.
நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை :
"ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ள சம்பவம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் நான் நினைக்கிறேன் அந்த பள்ளியை மூடவேண்டும், ஏனெனில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ அல்லது அவர்களின் பெற்றோரிடமோ மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்கள் மிக கடுமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். என் நண்பர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சிலர் இதை ஒரு மதவாத பிரச்சனையாக மாற்ற நினைப்பது இழிவான செயல். மாணவர்களிடம் பாலியல் துன்புறுதலில் ஈடுபட்ட நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அதன் மூலம் இந்த குற்றம் எந்த அளவு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்பதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதை மத பிரச்சனையாக மாற்றுவதை கைவிட்டு, குறைந்தபட்சம் இப்போதாவது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள்" என நடிகர் விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.