விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி

விஜயின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த உணர்வுக்கு ஆட்படுத்தியுள்ளது

Continues below advertisement

நடிகர் விஜயின் கடைசி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Continues below advertisement

நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாக இருக்கிறது தளபதி 69. தி கோட் படம் வெளியான சில நாட்களே கடந்துள்ள நிலையில் விஜயின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது.

எச் வினோத் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அடுத்தாண்டு அக்டோபர் மாதம், இந்த திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் விஜய் இந்த படத்தின் மூலமாக சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார்.

இதனால் இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த உணர்வுக்கு ஆட்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜயின் 30 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

எனவே, விஜயின் கடைசி படம் ஒரு அரசியல் படமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல், படத்தின் போஸ்டரில் The torch bearer of democracy என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு படம் வெளியாக இருப்பதால், கட்சி தொடர்பான வசனம் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

 

Continues below advertisement