சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், ரீல் ஹூரோவாக இருக்ககூடாது எனவும் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு இதற்கு மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
வரியில் இருந்து விதிவிலக்கு கேட்கிறார்கள் என்பது இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையாகும். ஏழை முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உண்டு. இதன்பேரில் தான் நடிகர் விஜய்யும் வரிவிலக்கு கோரி வழக்குத்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ரீல் ஹிரோ இல்லை ரியல் ஹூரோவாக என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இன்றைய சூழலில் எந்த வழக்குத்தொடர்ந்திருந்தாலும், வழக்கறிஞர்கள் எங்கு கையெழுத்து இட சொல்கிறார்களோ, அங்கே கையொழுத்திடுவது தான் அனைவரும் மேற்கொள்கிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் செய்திருப்பார்கள். இப்படி இருக்கும் பொழுது இதுப்போன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுக்கலாம் என அறிவுரை கூறியது விஜய்யின் வழக்கறிஞராகத் தான் இருக்க முடியும். எனவே இந்த இடத்தில் விஜய்யினை குறைசொல்லாமல் அவருக்கு அட்வைஸ் கொடுத்த வழக்கறிஞரைத்தான் குறை கூற வேண்டும் என முன்னாள் நீதிபதி கருத்து சந்துரு தெரிவித்துள்ளார். மேலும் வழக்குத்தொடர்ந்து மனு தள்ளுபடியானால் வரி செலுத்தப்போகிறார்கள், இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து சந்தோஷப்படப்போகிறார்கள் என தெரிவித்துள்ளார். இதோடு வட்டி கட்டாமல் இருக்கிறார் எனில், வட்டியுடன் அவர் எப்படினாலும் கட்டியாக வேண்டும். இதனால் அரசிற்கு எந்த நஷ்டமும் வரவில்லையே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக நடிகர் விஜய் வரிவிலக்கு தடைக்கோரிய வழக்கில், ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதுக்குறித்து தனது கருத்தினைத்தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதி சந்துரு, இந்த விஷயத்தில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? வரிச்சட்டங்களைப்பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரிதான். ஆனால் வரி வசூலுக்கு மட்டும் தான் இப்படி இருக்க வேண்டும். நடிகர் விஜய் திரைப்படங்களில் சமூக நீதிக்கான கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம். இருந்தப்போதும் அவர் டிகிரி படித்த ஒரு மாணவர் தான். இப்படி இருக்கும் பொழுது அவருக்கு எல்லா வரிச்சட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்க கூடாது. அவசியமும் இல்லை. நடிகரின் மேனேஜர் எதில் கையெழுத்திட சொல்கிறார்களோ? அதில் அவர் கையெழுத்து போட்டிருப்பார். இப்படிச்சூழலில் ஒருவரின் கேரக்டரை டேமேஜ் செய்யும்படி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விஜய் தரப்பில் அப்பீல் செய்யலாம் எனவும் முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வரிவிலக்கு எப்பொழுது நடைமுறைக்கு வந்தது? என்பது குறித்து முன்னாள் நீதிபதி தெரிவிக்கையில், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கும் வாகனங்களுக்காகத்தான் நுழைவு வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அங்கு, 4 சதவீத குறைந்த விற்பனை வரியும், தமிழகத்தில் 13 சதவீதமும் விற்பனை வரி இருக்கிறது. அந்த 9 சதவீத வரியை மிச்சப்படுத்த பாண்டிச்சேரியில் போய் வாகனங்களை வாங்குகிறார்கள். நானும் அதனைத்தான் மேற்கொண்டேன். அந்தமாதிரி, பாண்டிச்சேரியிலேயே அதிகளவில் வாகனங்கள் வங்குவது தமிழகத்திற்கு வரி நஷ்டம் எற்படுகிறது என்று ’நுழைவு வரி சட்டம்’ கொண்டு வந்தார்கள். குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தின் 304 வது பிரிவின்படி, இந்தியா முழுக்க யார், எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அதற்கு, எந்தத்தடையும் இருக்கக்கூடாது என்கிறது. ஆனால், இந்தமாதிரி வாகனங்களுக்கு நுழைவு வரி போடும்போது, அந்த சட்டம் செல்லுமா? செல்லாதா? என்ற பிரச்சனை எழுந்தது. 4 சதவீத வரிக்கும் 13 சதவீத வரிக்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 9 சதவீதம் வருகிறது. அதனால்,அதில் தவறில்லை. வரியை ஏய்க்க வாகனங்களை வாங்கி வருபவர்களிடம் வரி வாங்கலாம் என்றார்கள்.
ஆனால் தற்பொழுது நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் காரினை வாங்கவில்லை. அவருக்கு பிடித்தமான காரினை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி வரி கட்டி சுங்கவரியினை கட்டி ஹார்பரிலிருந்து காரை எடுத்து விட்டார். இக்காரினை பதிவு செய்யப்போகும் தான் கூடுதலாக நுழைவு வரியினை கேட்கிறார்கள். ஏற்கனவே கப்பல் வழியாக தான் வந்த காரினை சுங்க வரிக்கட்டி எடுத்துவிட்ட நிலையில், நுழைவு வரி செலுத்த முடியாது என நடிகர் விஜய் தரப்பு கேட்கிறது. இது அவரது உரிமை. யாரையும் அவர் ஏமாற்றவில்லை. எனவே நீதிபதியாக இருந்து இதுப்போன்று ஸ்டேட்மென்ட் கொடுப்பது எல்லாம் அநாவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கினை தள்ளுபடி செய்கிறார்கள் என்றால் அவர் வரி செலுத்தப்போகிறார். அதற்கு இதுப்போன்ற கருத்துக்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. மேலும் எந்த நடிகராக இருந்தாலும் கொடுக்கும் ஸ்கிரிப்டினை அப்படியே நடிப்பார்கள். அப்படித்தான் வழக்கறிஞர்கள் கூறிய இடத்தில் நடிகர் விஜய் கையெழுத்து போட்டிருப்பார் என தன்னுடைய கருத்தினை முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.