தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதனை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் இருந்து புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்து BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், “கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வணிக வரித்துறை அளித்த நோட்டீஸில் காருக்கான நுழைவு வரி 7.98 லட்சம் மற்றும் உரிய நேரத்தில் செலுத்தாதற்கான அபராதமாக 30.23 லட்சம் ரூபாய் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை வழக்கு நிலவையில் இருந்த காரணத்தால் நான் கட்டவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி எனக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் மொத்த அபராத தொகை 38.21 லட்சத்தையும் செலுத்தாமல் விட்டால் என்னுடைய சொத்துகள் முடக்கப்படுவதுடன் சிறை தண்டனை பெறவும் நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நான் நுழைவு வரியான 7.98 லட்சம் ரூபாயை மட்டும் செலுத்தியுள்ளேன். இந்த அபராத தொகை மற்றும் எனக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் செவ்வாய்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜயிடம் இருக்கும் கார் கலெக்ஷன்களை பொருத்தவரை, நிசான் எக்ஸ்-டிரெயில் இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் இல்லை, அனால் விஜயிடம் ஒன்று உள்ளது. தனது டொயோட்டா காரை விஜய் தனது தினசரி தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார். இயக்குநர் ஷங்கருக்குப் பிறகு, ஆர் பேட்ஜுடன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டை சொந்தமாகக் கொண்ட இரண்டாவது தமிழ் பிரபலம் நடிகர் விஜய்தான். பி.எம்.டபிள்யூ ரேஞ்ச் கார்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும் இவரிடம் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6-ஐ வகை கார்கள் இவரிடம் உள்ளது.
மேலும் படிக்க: குதிரை மீது அமர்ந்து 3 மணிநேரத்தில் 1,389 அம்புகளை எய்து உலக சாதனை.. வாகை சூடிய முத்தமிழ்ச்செல்வி