கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 7 திரையரங்குகள் அசோசியேஷன் மூலமும் (அஜந்தா, எல்லோரா, திண்ணாப்பா, அமுதா, பொன் அமுதா, கலையரங்கம், கவிதாலயா) மூலமும் (லட்சுமி ராம், வெற்றி) 2 திரையரங்கம் தனியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை ஒரே கட்டமாக உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.



அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நாளிதழில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்கம் குறித்து பெயர்கள் இடம்பெற்று வந்தன. அதில் குறிப்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அஜந்தா, திண்ணப்பா, திரையரங்கம் உள்ளிட்ட மூன்று திரையரங்கில் பெயர் இடப்பட்டிருந்தது அதைத் தொடர்ந்து மூன்று தினங்களும் ரசிகர் காட்சிகள் காண விஜய் ரசிகர் மன்ற ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர் இந்நிலையில் திடீரென கரூர் மாநகராட்சியில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




இதை தொடர்ந்து கரூர்  திரையரங்க உரிமையாளர்கள் கூறுகையில், விநியோகஸ்தர்கள் அதிக விலை கூறுவதால் எங்கள் சங்கத்தின் மூலம் தொகை கொடுத்து திரைப்படத்தை வாங்க முடியவில்லை. ஆகவே, கரூர் மாநகரில் விஜய் நடித்த  பீஸ்ட் திரைப்படம் வெளியிட போவதில்லை என தெரிவித்துள்ளனர். அதே நிலையில் கரூர் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இயங்கும் கரூர் சினிமா என்ற ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் பதிவிட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகரில் இயக்கப்படவில்லை வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற பதிவு இடம்பெற்றுள்ளது.



 


இந்நிலையில் கரூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் பாலுவிடம் அலைபேசி மூலம் கேட்டபோது, "பல்வேறு மாவட்டங்களில் விஜய் நடித்த திரைப்படம் அதிகாலை முதல் காட்சிகள் திரையிடப்படும் நிலையில் கரூர் மாநகரில் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகவில்லை என செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறோம். உடனடியாக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பேசி தீர்வு கண்டு தளபதி விஜய் அவர்களின் படத்தை வெளியிட வேண்டும்” என கூறியுள்ளார்.



நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கரூர் மாநகரில் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், கரூர் விஜய் ரசிகர்கள் கரூர் சுற்றியுள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, வேலூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி மாவட்ட திரையரங்குகளுக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது