அண்மையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் இந்திய அளவில் 5 மொழிகளில் வெளியானது. இத்திரைபடம் சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், வன்னியர் சமுகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாலும், படத்தைத் தயாரித்த 2டி நிறுவனம் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர்கள் சூர்யா-ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று குடியாத்தம் பகுதியை சேர்ந்த வன்னியர் சங்கத்தின் சார்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.



 

அவர்கள் அளித்த அப்புகார் மனுவில்,ஜெய்பீம் திரைப்படம் கடந்த 1995-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தின் காட்சி அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்திரைப்படம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக திரைபடத்தில் வில்லனாக இருக்கக்கூடிய அந்தோணிசாமி என்ற உண்மை பெயரை மாற்றி குருமூர்த்தி என்றும் அவரை காட்டும்போது வன்னிய கலசத்தை காட்டி எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்ற முழு பேரை அழைக்காமல் குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்திற்கு புறம்பானது, வேண்டுமென்று மாவீரன் குருவை இழிவு படுத்த வேண்டும் என்று இந்த திரைப்படம் வெளியிட்டதாகவும் இந்த படத்தை தயாரித்த 2டி நிறுவனம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா-ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மீது ஜாதிப் பிரிவினை ஏற்படுத்த படம் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வன்னியர் சங்கத்தின் சார்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைபடம் அமேசான் பிரைபில் வெளியாகி இருந்தது. படம் வெளியான தேதி முதல் தற்போது வரை அதன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைபடத்திரல் அக்கினி கலசத்தை காட்டியுள்ளதாக எழுந்த முகாரையடுத்து அது மாற்றப்பட்டு அங்கு சரஸ்வதி படம் பொறித்த காலெண்டர் வைக்கப்பட்டது. மேலும் இக்கதையின் உண்யை நியகியான பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா மற்றும் 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் 15 லட்சம் வங்கி வைப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ICC Announcement: இந்தியாவில் 2 உலகக்கோப்பை தொடர்கள்: 2024 - 2031 ஐசிசி தொடர் அட்டவணை முழு விவரம் வெளியீடு!



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



 பேஸ்புக் பக்கத்தில் தொடர



 ட்விட்டர் பக்கத்தில் தொடர



 யூட்யூபில் வீடியோக்களை காண