தளபதியின் தளபதி புஸ்ஸி ஆனந்துக்கு உடல்நல குறைவு.. நள்ளிரவில் மருத்துவமனை விரைந்த விஜய்

உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார்

Continues below advertisement

விஜய் மக்கள் இயக்கம்

சமீப காலமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னெடுப்புகள் அனைத்திற்கும் காரணம் விஜய் அடுத்த கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அவ்வப்பொழுது விஜய்யும் தனது திரைப்பட பாடல் வெளியீட்டு விழா அதேபோன்று வெற்றி விழா ஆகிய  விழாவின்பொழுது அரசியல் சார்புடைய பேச்சுகளை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் விஜய்

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் மக்கள் பணி செய்யும் இயக்கம் என கூறி வந்த நிலையில் தற்போது அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியிலும் விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைத்து வருகிறார்.  அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின்  பொதுச்செயலாளராக  புஸ்ஸி ஆனந்த்  வருகிறார்.  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் அனைத்து கட்டளையும் ஆனந்த் மூலமாகவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  விஜயின் நம்பிக்கை கூறிய நபராக,   சமீப காலத்தில் புஸ்ஸி ஆனந்த்  உருவாகி இருக்கிறார்.

விஜயின் நம்பிக்கையை, பெற்ற புஸ்ஸி ஆனந்த்

அதேபோன்று புஸ்ஸி ஆனந்த்,  எடுக்கும் பல்வேறு  முடிவுகளும்  மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்கின்றனர். அதே போன்று நடிகர் விஜய்யின் நம்பிக்கை கூறிய நபராக விளங்கி வருவதால்,  விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் அனைத்து பொறுப்பையும் அவரிடம் கொடுத்திருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களும் அவர் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நேரில் சென்ற நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்திடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.  பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தது, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Continues below advertisement