கோவை, தேனி, தென்காசி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், நீலகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர்,  திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


மிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்  காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி,  திருப்பூர்,  தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.       


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.  


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


தர்மபுரி PTO,  தம்மம்பட்டி (சேலம்), கொடுமுடி (ஈரோடு), சேலம் தலா 9, குடிமியான்மலை (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, மருங்காபுரி (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்), தர்மபுரி, வாத்தளை அணைக்கட்டு (திருச்சி), அடையாமடை (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 6, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), ஆனைமடுவு அணை (சேலம்), நம்பியூர் (ஈரோடு), ராசிபுரம் (நாமக்கல்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பாப்பாரப்பட்டி KVK AWS, மணப்பாறை (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), சங்கரிதுர்கம் (சேலம்), துறையூர் (திருச்சி), ஊத்து (திருநெல்வேலி) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.