இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மோக்கா புயல் உருவானதன் காரணமாக காற்றில் இருக்கும் ஈரப்பதம் இழுத்துச் செல்லப்பட்டதால் வறண்ட வானிலை நிலவுகிறது. மேலும் கடல் காற்று கடந்த சில தினங்கள் நிலத்திற்கு வராததால் வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. ஆனால் நேற்று காலை 11 மணி அளவில் கடல் காற்று வீசத்தொடங்கியதால் சென்னையில் வெப்பநிலை சற்று குறைந்து பதிவானது.


அதிகபட்ச வெப்பநிலை: 


கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து, திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 40.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.



இன்றும் வெயிலின் தாக்கம் நேற்றைய தினத்தை ஒட்டி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று காலை முதலே கடல் காற்று வீசத்தொடங்கியுள்ளதால் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைவாகவே பதிவாகும் என தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் வெப்பநிலை அதிகமாக தான் இருக்கும் என்றும்  கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 40 அல்லது 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை புறநகர், வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


TN Weather: தமிழ்நாட்டில் கொளுத்தும் வெப்பம்.. சென்னையில் தொடர்ந்து சதமடிக்கும் வெயில்..! முழு விவரம் உள்ளே..!


Jallikattu : தமிழ்நாடே எதிர்பார்ப்பு... ஜல்லிக்கட்டுக்கு தடையா? விலக்கா...? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு...!


Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!