தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.04.2023 முதல் 07.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 8, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 7, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காரைக்கால் (காரைக்கால்) தலா 4, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சின்கோனா (கோயம்புத்தூர்), தேக்கடி (தேனி) தலா 3, மேல் பவானி (நீலகிரி), பெரியார் (தேனி), வத்திராயிருப்பு (விருதுநகர்), சமயபுரம் (திருச்சி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), கூடலூர் (தேனி), பெலாந்துறை (கடலூர்) தலா 2, சோலையாறு (கோயம்புத்தூர்), வேலூர், பாடலூர் (பெரம்பலூர்), திருச்சி விமான நிலையம்,கொடைக்கானல் (திண்டுக்கல்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), சண்முகாநதி (தேனி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.