தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டி உள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு ஊர் கர்நாடகா மற்றும் கேரளா பகுதியில் இருந்து வடகிழக்க பருவமழை விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால்,  அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா  மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து  இன்று (12.01.2023) விலகியது.


12.01.2023 மற்றும் 13.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். 
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.


14.01.2023 முதல் 16.01.2023 வரை:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.