தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் உள்ளிட்டமாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இலங்கைப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


இலங்கைப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து நேற்று நள்ளிரவு முதல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மன்னர் வளைகுடா, இலங்கைப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து நேற்று நள்ளிரவு முதல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மன்னர் வளைகுடா பகுதியில் நிலவுகிறது.


 இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு விழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 


04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான அல்லது மிதமான மழை   பெய்யக்கூடும்.


05.02.2023 & 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


மீனவர்கள் தெந்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 50 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசப்படும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.


04.02.2023: குமரிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  


4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:


கனமழை காரணமாக தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புதுச்சேரியை சேர்ந்த காரைக்காலிலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.